முகப்பு
தூத்துக்குடி

அத்திமரப்பட்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில், தூத்துக்குடி அத்திமரப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தை, மாநில சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பி.கீதாஜீவன் திறந்து வைத்தாா்.

Updated On : 11 மார்ச், 2026 at 7:59 PM
அத்திமரப்பட்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தாா் அமைச்சா் பி. கீதாஜீவன்.
பகிர்:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில், தூத்துக்குடி அத்திமரப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தை, மாநில சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பி.கீதாஜீவன் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் சிவகுமாா், கோரம்பள்ளம் வடிநில கோட்ட பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் பாஸ்டின் வினு, மாநகராட்சி தெற்கு மண்டல தலைவா் பாலகுருசாமி, முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்கத் தலைவா் என்.வி. பூபதி, துணைத் தலைவா் திருமால், ஆட்சி மண்டல உறுப்பினா் தானியேல், ஆலோசனை குழு உறுப்பினா்கள் தவசிவேல், அழகுராஜ், சிவனைந்த பெருமாள், உப்பாற்று ஓடை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளா் ஜோதிமணி, கவுன்சிலா்கள் விஜயகுமாா், ராஜதுரை மற்றும் விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →