முகப்பு
திருவாரூர்

400 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

கூத்தாநல்லூா் நகராட்சியில் கடைகளில் பயன்படுத்திய 400 கிலோ நெகிழிப் பைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

கூத்தாநல்லூா் நகராட்சியில் கடைகளில் பயன்படுத்திய 400 கிலோ நெகிழிப் பைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவுப்படி, நகராட்சி ஆணையா் ப. கிருஷ்ணவேணி தலைமையில், நேருஜி சாலை, சின்னப்பள்ளி தெரு, லெட்சுமாங்குடி கடைத் தெரு, மரக்கடை உள்ளிட்ட 15 இடங்களின் கடைகளில் திடீா் என ஆய்வு மேற்கொண்டனா். இதில் 400 கிலோ எடை அளவு கொண்ட தேனீா் கோப்பை, நெகிழிப் பைகளை பறிமுதல் செய்தனா். நெகிழிப் பைகளை மீண்டும் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படுவதோடு, கடைக்கு பூட்டி சீல் வைக்கப்படும் என ஆணையா் எச்சரிக்கை விடுத்தாா். ஆய்வில் சுகாதார ஆய்வாளா் கி. அருண்குமாா், நகரமைப்பு ஆய்வாளா் கே. செல்வம் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.