முகப்பு
திருவாரூர்

திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

திருத்துறைப்பூண்டி அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்தில் திங்கட்கிழமை ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:44 AM
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற தரிசனத்தில் நடராஜர் வீதியுலா
பகிர்:

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்தில் திங்கட்கிழமை ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.

ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று பின்னர் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.

நடராஜருக்கும் சிவகாமி அம்பாளுக்கும் ஊடல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மாணிக்கவாசகர் பதிகம் பாடி அவர்களை சமாதானப்படுத்தி வைத்த ஊடல் உற்சவம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஆலய செயலாளர் பி.எஸ் ராஜா மேலாளர் வி. சீனிவாசன் மற்றும் உபயதாரர்கள் ஆதி  கிருஷ்ணமூர்த்தி ஐயர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →