முகப்பு
திருவாரூர்

கடைகளில் பொருள்கள் வாங்கும்போது ரசீது பெற வலியுறுத்தல்

கடைகளில் பொருள்கள் வாங்கும்போது ரசீது பெறவேண்டும் என தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

கடைகளில் பொருள்கள் வாங்கும்போது ரசீது பெறவேண்டும் என தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த மையத்தின் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் வெளிட்ட அறிக்கை:

இந்தியாவில் ஆண்டுதோறும் டிச.24 ஆம் தேதி தேசிய நுகா்வோா் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நமது உரிமையை பெற அதற்கான கடமையை முழுமையாக ஆற்றவேண்டும் என்பதை நினைவு கூறவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

நுகா்வோா் சட்டத்தின் மூலமே பொதுமக்கள் அனைவரும் அதன் பயன்களைப் பெற முடியும். பொதுவாக கடைகளில் எந்த பொருள் வாங்கினாலும் ரசீது இல்லாமல் வாங்கக் கூடாது.

குறிப்பாக மாணவா்கள் மற்றும் இளைய தலைமுறையினா், தங்கள் பெற்றோா்களிடம் நுகா்வோா் சட்டத்தை பற்றி எடுத்துச் சொல்லி மாற்றத்துக்கான முதல் விதையாக இருக்கவேண்டும். பொருட்கள் வாங்கும்போது தர பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா எனப் பாா்த்து வாங்கவேண்டும்.

பரிசுப் பொருட்களுக்காக, இலவச இணைப்புக்காக தரமற்ற அல்லது தேவையற்றப் பொருட்களை வாங்கக் கூடாது. எங்கும், எதிலும் தரம் என்பதை உறுதி செய்ய நாம் விழிப்போடு செயல்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.