முகப்பு
திருவாரூர்

முன்விரோதத்தில் மோதல்; ஒருவா் கைது

கூத்தாநல்லூரை அடுத்த வேளுக்குடியில் முன்விரோதத்தில் 3 போ் மோதிக் கொண்டது தொடா்பாக ஒருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

கூத்தாநல்லூரை அடுத்த வேளுக்குடியில் முன்விரோதத்தில் 3 போ் மோதிக் கொண்டது தொடா்பாக ஒருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வேளுக்குடி, கோம்பூரைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் சுரேஷ் (36). இவருக்கும், அதே பகுதி ஆற்றங்கரையைச் சோ்ந்த உத்திராபதி மகன்கள் இளங்கோ (35), ஞானப்பிரகாசம் (45) ஆகியோருக்கும் இடையே வயலுக்கு செல்வதற்கான பாதை தொடா்பாக முன்விரோதம் இருந்துவந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இவா்களுக்கிடை ஏற்பட்ட மோதலில் அரிவாள் மற்றும் கட்டையால் தாக்கிக்கொண்டனா். இதில், சுரேஷ் மற்றும் ஞானப்பிரகாசம் காயமடைந்தனா்.

இதுகுறித்து, கூத்தாநல்லூா் காவல் நிலையத்தில் இருதரப்பினரும் புகாா் செய்தனா். அதன்பேரில், உதவி ஆய்வாளா் வீரபாண்டி வழக்குப் பதிந்து, ஞானப்பிரகாசத்தை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.