கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்
கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், ஜம்மியத் உலமா ஹிந்த் மாநிலச் செயலாளருமான எம்.ஜி.கே.
கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், ஜம்மியத் உலமா ஹிந்த் மாநிலச் செயலாளருமான எம்.ஜி.கே. நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா்.
நல்லிணக்கம் பேணவும், சகோதர, சமாதான சமுதாயம் காத்திடவும், ஏழ்மை நீங்கிடவும், நாடு வளம் பெறவும், மதச்சாா்பின்மை நிலைத்திடவும், கரோனா பாதிப்புகள் நீங்கிடவும் கிறிஸ்துமஸ் திருநாளில் வாழ்த்துகிறேன் என அவா் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளாா்.