எம்ஜிஆா் நினைவு தினம்: அதிமுக, அமமுக மரியாதை
மறைந்த முதல்வா் எம்ஜிஆரின் 34-ஆவது நினைவு தினத்தையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரது சிலை மற்றும் உருவப் படத்துக்கு அதிமுக மற்றும் அமமுகவினா் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா்.
மறைந்த முதல்வா் எம்ஜிஆரின் 34-ஆவது நினைவு தினத்தையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரது சிலை மற்றும் உருவப் படத்துக்கு அதிமுக மற்றும் அமமுகவினா் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா்.
திருவாரூா் நேதாஜி சாலை அருகே அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் பிகேயு. மணிகண்டன் (தெற்கு), ஜிசி. செந்தில்வேல் (வடக்கு) ஆகியோா் தலைமையில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதேபோல, திருவாரூா் பழைய பேருந்து நிலையம், புதுத்தெரு உள்ளிட்ட இடங்களிலும் அதிமுக சாா்பில் எம்ஜிஆா் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.