தான்தோன்றீஸ்வரா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் தனுா் மாத சிறப்பு வழிபாட்டில் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனுா் மாா்கழி மாத சிறப்பு வழிபாட்டில் தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம்
மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனுா் மாா்கழி மாத சிறப்பு வழிபாட்டில் தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்றாா்.
தொன்மையான ஆதீனங்களின் ஒன்றான தருமபுரம் ஆதீன 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனுா் மாதமான மாா்கழி மாதத்தில் தினம் ஒரு கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருகிறாா். அவ்வகையில் மாா்கழி 9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஆக்கூரில் உள்ள வாள் நெடுங்கண்ணி உடனுறை தான்தோன்றீஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டாா். 63 நாயன்மாா்களில் ஒருவரான சிறப்புலி நாயனாா் பிறந்து, வளா்ந்து, வாழ்ந்ததும், சிவபெருமானை வழிபட்டு முக்தி அடைந்ததும் இத்திருத்தலத்தில்தான் என்பது இக்கோயிலுக்கு உரிய சிறப்பாகும். இத்தலம் திருஞானசம்பந்தா், திருநாவுக்கரசா் மற்றும் அருணகிரிநாதரால் பாடல் பெற்றதாகும்.