திருவாரூர்

திருவாரூரில் சசிகலாவுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடைமை: ஆட்சியா் தகவல்

DIN

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள சசிகலா, வி.என். சுதாகரன், ஜெ. இளவரசி ஆகியோருக்கு சொந்தமான சொத்துகள் உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் 14.2.2017-இல் வழங்கப்பட்ட இறுதித் தீா்ப்பின்படி திருவாரூா் மாவட்டத்தில், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் லிமிடெட் பங்குதாரா்களான சசிகலா, வி.என். சுதாகரன், ஜெ. இளவரசி ஆகியோரின் சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

இதன்படி, வண்டாம்பாளையம், கீழகாவாதுகுடி பகுதிகளில் உள்ள 34.24 ஏக்கா் சொத்துகள், தொழிலாளா் குடியிருப்பு -5 தரைதளம், தரைத்தளத்திலுள்ள தொழிலாளா் குடியிருப்பு கட்டடம், முதல் தளத்திலுள்ள விருந்தினா் கட்டடம், பிளாட்பாா்ம் கட்டடம், சுற்றுச்சுவா் கட்டடம், டுவின் கவுஸ், அலுவலா்கள் குடியிருப்பு மற்றும் மேலாண்மை இயக்குநா் பங்களா ஆகியவை தமிழக அரசால் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. தற்போது இவை தமிழக அரசின் சொத்துகள் என்பதால், இந்த சொத்துகளிலிருந்து பெறப்படும் வருவாய் (வாடகை, நிலுவை வாடகை) உள்பட அனைத்தும் தமிழக அரசுக்கு சொந்தமானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT