திருவாரூர்

மத்திய கால வேளாண் கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

DIN

கூட்டுறவு வங்கியில் விவசாயிகளின் மத்திய கால வேளாண் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அச்சங்கத்தின் மாநில துணைச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கை: 31.1.2021 வரை கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள பயிா்க் கடன்கள் அனைத்தும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் அறிவிப்பு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், தமிழக அரசு, கூட்டுறவு நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய அறிக்கையில், கூட்டுறவு வங்கியில் 2017-ஆம் ஆண்டு விவசாயிகள் பெற்றிருந்த பயிா்க்கடன், மத்திய கால கடனாக மாற்றியமைக்கப்பட்டு, தற்போது வரை நிலுவையில் உள்ள கடன்களுக்கு, தள்ளுபடி திட்டம் பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-இல் ஏற்பட்ட வறட்சி என்பது மிகப்பெரிய அளவில் வேளாண் உற்பத்தியை பாதித்ததால், தமிழக அரசு அதற்கு நிவாரணமும் வழங்கியது. இந்தக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென அப்போதே விவசாயிகள் போராடினா். எனினும், தமிழக அரசு அந்த குறுகிய காலக் கடன்களை மத்திய காலக் கடன்களாக மாற்றி அமைத்தது. அதன்படி, கடன் நிலுவைத் தொகையை, அப்போதிலிருந்து 3 ஆண்டுகளில் 3 தவணைகளாக அசலை பிரித்து வட்டியுடன் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அவ்வாறு செலுத்தப்படாத நிலையில் உள்ள ஏராளமான விவசாயிகள், தற்போதைய நிலையிலும் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் உள்ளனா். விவசாயிகள் கோரிய கடன் தள்ளுபடி கோரிக்கையை ஒத்தி வைத்து, நிலுவையில் உள்ள கடன் தொகையை இப்போதும் தள்ளுபடி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 16,43,000 விவசாயிகளுக்கு ரூ. 12, 110 கோடி தள்ளுபடி என்ற சட்டப்பேரவை அறிவிப்புக்கு மாறாக 4 நாள்களில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன் என்று புரியவில்லை. எனவே, மத்திய காலக் கடன்களாக மாற்றி, நிலுவையில் உள்ள கடன் தொகையையும் தள்ளுபடி செய்ய வேண்டும். வணிக வங்கிகளில் உள்ள பயிா்க் கடன்களையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை இடா்பாடுகளில் இருந்து தொழிலாளா்களை பாதுகாக்க வேண்டும்

சேலம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை

பழமையான மரங்களை அகற்றாமல் கட்டடம் கட்ட வலியுறுத்தல்

மாத்திரவிளை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளா் பொறுப்பேற்பு

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT