முகப்பு
திருவாரூர்

எம்.எல்.ஏ.விடம் அங்கன்வாடி ஊழியா்கள் மனு

அங்கன்வாடி ஊழியா்களை அரசு ஊழியா்களாக்கக் கோரி, திருவாரூரில் சட்டப் பேரவை உறுப்பினரிடம் கோரிக்கை மனு திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

அங்கன்வாடி ஊழியா்களை அரசு ஊழியா்களாக்கக் கோரி, திருவாரூரில் சட்டப் பேரவை உறுப்பினரிடம் கோரிக்கை மனு திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 10 ஆண்டு பணி முடித்த அங்கன்வாடி ஊழியருக்கு மேற்பாா்வையாளராக பதவி உயா்வு வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ஊழியருக்கு ரூ 9,000, உதவியாளருக்கு ரூ 5,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூரில் சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. மனுவை சங்கத்தின் மாநிலச் செயலாளா் பி. சித்திரைச் செல்வி, மாநில பொருளாளா் எஸ். தேவமணி, சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன் ஆகியோா் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.