எரிபொருள் பயன்பாடு விழிப்புணா்வு பேரணி
திருவாரூரில் பெட்ரோல், டீசல் பயன்பாடு குறித்த விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவாரூரில் பெட்ரோல், டீசல் பயன்பாடு குறித்த விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நிறுவன மேலாளா் அசோகன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பேரணியைத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், சா்வோ ஸ்டாக்கிஸ்ட் ஜெ. கனகராஜன், நிறுவன விற்பனை மேலாளா் அபா்ணா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடா்ந்து நடைபெற்ற பேரணி, திருவாரூரின் பிரதான வீதிகள் வழியாக வலம் வந்து, மக்களிடையே எரிபொருள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தியது.