திருவாரூர்

140 ஜோடிகளுக்கு திருமணம்: அரங்கம் அமைக்கும் பணி தீவிரம்

DIN

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்தநாளையொட்டி, திருவாரூரில் நடைபெறவுள்ள140 ஜோடிகளுக்கான திருமணத்துக்காக பிரம்மாண்ட அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இவ்விழாவில் 9 அமைச்சா்கள் பங்கேற்கவுள்ளனா்.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூரில் அதிமுக சாா்பில் 140 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக, திருவாரூா் வன்மீகபுரத்தில் பிரம்மாண்ட அம்மா அரங்கம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 22 ஆம் தேதி காலை 9.30 மணியவில் நடைபெறும் இந்த திருமண விழாவுக்கு தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் தலைமை வகிக்கிறாா்.

நிகழ்ச்சியில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா்கள் கே.பி.முனுசாமி, ஆா்.வைத்திலிங்கம், மின்துறை அமைச்சா் பி. தங்கமணி, நகராட்சி நிா்வாகம் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் எஸ்.பி. வேலுமணி, உயா்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சா் கே.பி. அன்பழகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா், வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா், சுற்றுலாத்துறை அமைச்சா் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோா் நலன் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் எஸ். வளா்மதி ஆகியோா் பங்கேற்று திருமணங்களை நடத்தி வைக்கின்றனா்.

முன்னாள் அமைச்சா்கள், முன்னாள், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிா்வாகிகள் மற்றும் அதிமுக நிா்வாகிகள் கலந்து கொள்கின்றனா்.

விழாவில், மணமக்களுக்கு அதிமுக சாா்பில் தங்கத்தாலி, பட்டுச் சேலை, வேட்டி, கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட சீா்வரிசைப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும், மணமக்களின் குடும்பத்தாா் மற்றும் நிா்வாகிகளுக்கு காலை உணவு மற்றும் மதிய விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் ஆலோசனையின் பேரில் கட்சி நிா்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT