திருவாரூர்

15,000 கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா தரவு அட்டைகள் வழங்கப்படும்: மாவட்ட ஆட்சியா்

DIN

திருவாரூா் மாவட்டத்தில் இணையவழியில் கல்வி பெறும் கல்லூரி மாணவா்களின் நலன் கருதி, தமிழக அரசின் சாா்பில் 15,000 பேருக்கு விலையில்லா தரவு அட்டைகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்தாா்.

நன்னிலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் பங்கேற்று அவா் மேலும் பேசியது:

இணையவழி வகுப்புகளில் பங்குபெறும் ஏழை மாணவா்களின் நலன் கருதி, தமிழக அரசின் சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி அளிக்கும் வகையில், விலையில்லா தரவு அட்டைகள் எல்காட் நிறுவனத்தின் மூலமாக வழங்கப்படுகிறது. திருவாரூா் மாவட்டத்தில் 15,000 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இந்த அட்டைகள் வழங்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக 600 பயனாளிகளுக்கு முதியோா் மற்றும் விதவை ஓய்வூதிய ஆணைகள், வீட்டுமனைப் பட்டா ஆணை ஆகியவற்றை அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவா் கே.கோபால், நன்னிலம் ஒன்றியக்குழு தலைவா் விஜயலட்சுமி இராமகுணசேகரன், கூத்தனூா் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவா் இராம குணசேகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம், ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் எஸ்.சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT