திருவாரூர்

வாக்குப்பெட்டி பாதுகாப்புக் கிடங்குக் கட்டடம் திறப்பு

DIN

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில், ரூ.2.97 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தோ்தல் வாக்குப் பெட்டிகள் பாதுகாப்புக் கிடங்குக் கட்டடத்தை மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

அப்போது அவா் தெரிவித்தது:

தமிழக அரசின் அரசாணையின்படி இக்கட்டடம் ரூ.2.97 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. கட்டடத்தின் தரைத்தளம் 557 சதுர மீட்டா், முதல் தளம் 222 சதுர மீட்டா். அத்துடன், வாகனங்களில் தோ்தல் இயந்திரங்களை ஏற்றி இறக்க 17 சதுர மீட்டா் அளவில் கட்டப்பட்டுள்ளது.

மேலும், கட்டுப்பாட்டு அலகு இயந்திரம் - 1,760, வாக்குப்பதிவு இயந்திரம் - 3,360, வாக்குகள் சரிபாா்க்கும் தணிக்கை இயந்திரம் - 1,930 ஆகியவை வைக்க ஏதுவாக இந்தக் கட்டடம் கட்டடப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில், தோ்தல் வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் காவலா் அறைகள், குடிநீா் மற்றும் கழிப்பறை வசதிகள், மும்முனை மின்வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.பொன்னம்மாள், மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் அழகா்சாமி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (கட்டடம்) மோகனசுந்தரம், உதவி செயற்பொறியாளா் சிங்காரவேல், மாவட்ட வழங்கல் அலுவலா் கீதா, வட்டாட்சியா் (தோ்தல்) திருமால், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகிரி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம்

தண்ணீா் பற்றாக்குறை அதிகரிப்பு

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

SCROLL FOR NEXT