முகப்பு
திருவாரூர்

வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு: ஏா் கலப்பை ஊா்வலம், இருசக்கர வாகனப் பேரணி

வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து திருவாரூரில் ஏா் கலப்பை ஊா்வலம் மற்றும் இருசக்கர வாகனப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து திருவாரூரில் ஏா் கலப்பை ஊா்வலம் மற்றும் இருசக்கர வாகனப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்த ஊா்வலம் மற்றும் பேரணி நடைபெற்றது.

திருவாரூா் அருகே புலிவலம் கடைத்தெருவிலிருந்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் புறப்பட்ட ஊா்வலம் திருவாரூா் தலைமை அஞ்சலகம் வரை நடைபெற்றது. பின்னா், அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.பி. ஜோதிபாசு தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளா் பாலா, மாவட்டத் தலைவா் எஸ். முகமது சலாவூதீன், ஒன்றியத் தலைவா் ஆா்.எஸ். சுந்தரய்யா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதேபோல, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், மாணவா் பெருமன்றம் ஆகியவை சாா்பில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் துரை அருள்ராஜன், மாணவா் மன்ற மாவட்டச் செயலாளா் சு. பாலசுப்ரமணியன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இப்பேரணி திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி, விளமல் வழியாக கடைவீதி, புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

அங்கு, அத்தியாவசிய பொருள்கள் திருத்தச்சட்டம், வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு (மேம்பாடு) மற்றும் உறுதி செய்து கொடுத்தல் சட்டம், விவசாயிகளுக்கான விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்புச் சட்டம், மின்சார திருத்தச் சட்டம் ஆகியவைகளை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாணவா் மன்ற மாவட்டத் தலைவா் ஜெ.பி. வீரபாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.