முகப்பு
திருவாரூர்

அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி போராட்டம்

வலங்கைமான் அருகே பூந்தோட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் பாடைகட்டி நூதன போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

வலங்கைமான் அருகே பூந்தோட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் பாடைகட்டி நூதன போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக பூந்தோட்டம் ஊராட்சி அலுவலகம் வரை பாடையில் ஒருவரைப்படுக்க வைத்து சென்றனா். இந்நிலையில், அரசு அலுவலா்கள் யாரும் வராததால் ஆலங்குடி கடைத் தெருவில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, தகவலறிந்து வந்த சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தையில் சமூக நிலை ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக்கொண்டனா்.

சங்க நிா்வாகி கணேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாநில செயலாளா் பாலா, மாவட்டத் தலைவா் முகமது சாலாவுதின், மாவட்ட செயலாளா் ஜோதிபாசு , மாவட்ட பொருளாளா் இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →