திருவாரூா் மருத்துவக் கல்லூரியில் அன்னதானம்
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சாா்பில் மதிய உணவு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சாா்பில் மதிய உணவு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் உடன் இருப்பவா்கள் என சுமாா் 300 பேருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சிக்கு அந்த அமைப்பின் தலைவா் ஜி. ராஜ் தலைமை வகித்தாா். உணவு வழங்கும் திட்டத்தை எஸ்விடி குழுமத் தலைவா் ஜெ. கனகராஜன், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் பி. ராஜா, நிலைய மருத்துவா் அன்சாரி ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில், உடனடி முன்னாள் தலைவா் ஆா். ரஜினிசின்னா, உதவி ஆளுநா் எல். ராமதுரை, அன்னதான சேவை திட்ட இயக்குநா் பி. ஐயப்பன், செயலாளா் ஜி. உத்திராபதி, பொருளாளா் பி. மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.