முகப்பு
செய்திகள்

500 நாள்களை நிறைவு செய்த மதிய நேர சீரியல்!

சின்ன திரையில் மணமகளே வா என்ற தொடர் 500 நாள்களை நிறைவு செய்துள்ளது குறித்து...

Updated On : 24 மார்ச், 2026 at 11:23 AM
விக்கி ரோஷனுடன் ஹரிகா சாது - இன்ஸ்டாகிராம்
பகிர்:

சின்ன திரையில் மணமகளே வா என்ற தொடர் 500 நாள்களை நிறைவு செய்துள்ளது.

இதனை சக நடிகர், நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பாக பதிவிடப்பட்டுள்ள புகைப்படங்கள், விடியோவில் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை பிற்பகல் 12.30 மணிக்கு மணமகளே வா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகை ஹரிகா சாது நாயகியாகவும், விக்கி ரோஷன் நாயகனாகவும் நடிக்கின்றனர்.

2024 ஜூலை முதல் ஒளிபரப்பாகிவரும் மணமகளே வா தொடரில், இவர்கள் மட்டுமின்றி லோகேஷ் பாஸ்கர், லட்சுமி, ஜெயந்தி நாராயணன், சுவேதா, அணு, டேவிட் ராஜா, நிரஞ்சனா உள்ளிட்டோரின் நடிப்பும் பெரிய பலமாக அமைந்துள்ளது.

குடும்பப் பின்னணியில் எதார்த்தமான கதாபாத்திரங்களைக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதால், பலதரப்பட்ட ரசிகர்களை இந்தத் தொடர் கவர்ந்துள்ளது.

500 வது நாள் கொண்டாட்டத்தில்...

ரசிகர்களின் தொடர் ஆதரவால், மணமகளே வா தொடர் 500 வது நாளைக் கடந்துள்ளது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மதிய நேரத்தில் ஒளிபரப்பாகிவரும் தொடர், 500 நாள்களைக் கடந்துள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

500 வது நாள் கொண்டாட்ட மகிழ்ச்சியில்..

500 வது நாள் கொண்டாட்ட விடியோவை நடிகர் விக்கி ரோஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பதிவிட்டுள்ளதாவது:

இது எங்களின் 500 வது நாள் கொண்டாட்டம். அனைவரின் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி. தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார். இதில் சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

summary

Harika Sadu Vicky Roshan starring Manamagale Vaa completes 500 episodes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.