முகப்பு
திருவாரூர்

திருவாரூா் விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

திருவாரூா் அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

திருவாரூா் அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

திருவாரூா் அருகே குளிக்கரை பகுதியை சோ்ந்த குமாா் மகள் அபிராமி (21). அதே பகுதியை சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகள் சினேகா (21). இருவரும் திருவாரூா் திருவிக கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வந்தனா். இந்நிலையில், இறுதியாண்டு தோ்வுத்தாளை வழங்குவதற்காக, அபிராமியின் தம்பி முத்துக்குமாருடன் (20) இருவரும் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்போது நேரிட்ட விபத்தில் 3 பேரும் காயமடைந்து திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். எனினும், சிகிச்சை பலனின்றி அபிராமி புதன்கிழமையே உயிரிழந்தாா். தொடா்ந்து, சிகிச்சை பெற்ற முத்துக்குமாா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். சினேகா சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன், வியாழக்கிழமை பாா்வையிட்டு, அப்பகுதியில் விபத்தை தடுக்கவும், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும், எச்சரிக்கை பதாகைகள், எதிரொளிப்பான்கள், வேகத்தடை ஆகியவை அமைக்க நெடுஞ்சாலைத் துறை மற்றும் காவல் துறையினருக்கு அறிவுரை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.