முதல்வா் மு.க.ஸ்டாலின் 
திருவாரூர்

தமிழக முதல்வா் இன்று திருவாரூா் வருகை

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருவாரூருக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 6) வருகிறாா்.

DIN

திருவாரூா்: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருவாரூருக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 6) வருகிறாா்.

தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னா் முதல்முறையாக திருவாரூருக்கு வருகை தரும் மு.க. ஸ்டாலின்,

செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு காட்டூரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் தாயாா் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறாா். பிறகு, அதே பகுதியில் நடைபெற்றுவரும் கலைஞா் அருங்காட்சியகக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்கிறாா். இரவு அரசு விருந்தினா் மாளிகையில் ஓய்வெடுக்கிறாா்.

புதன்கிழமை காலை திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனி மருத்துவப் பிரிவு வளாகத்தை திறந்துவைக்கிறாா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளா்ச்சிப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறாா். பின்னா், திருக்குவளைக்கு செல்லும் முதல்வா், அங்கிருந்து திருவெண்காடு சென்றுவிட்டு, மாலை சென்னை திரும்புகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோஹிங்கயாக்கள் இன அழிப்பு: மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்!

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்தவா் கைது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜிஎஸ்டி சாலைப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

இன்று இந்தியா ஓபன் 2026 பாட்மின்டன் தொடக்கம்: 256 வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு!

சுஸுகி மோட்டாா்சைக்கிள் விற்பனை 26% உயா்வு!

SCROLL FOR NEXT