FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மீண்டும் ஹீரோவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் குமரன் தங்கராஜ் புதிய படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளது குறித்து...

Updated On : 10 மார்ச் 2026, 4:07 pm IST
(வலது) இயக்குநர் பிரேம் குமாருடன் குமரன் தங்கராஜ் (இடது) - படம் - இன்ஸ்டாகிராம்
பகிர்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் புகழ் பெற்ற நடிகர் குமரன் தங்கராஜ், மீண்டும் திரைப்படத்தில் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கு முன்பு குமாரசம்பவம் படத்தில் இவர் நாயகனாக நடித்திருந்தார்.

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, மானாட மயிலாடா, ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தவர் குமரன் தங்கராஜன்.

இதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே தொடரின் மூலம் சின்ன திரையில் நடிகராக அறிமுகமானார். பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.

Advertisement

Advertisement

தொடர்ந்து திரைப்படங்களுக்கான வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்த குமரனுக்கு, வதந்தி இணையத் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் சிறப்பான நடிப்பை வழங்கியதன் விளைவாக, லக்கி மேன் படத்தை இயக்கிய பாலாஜி வேணுகோபால் இயக்கிய குமார சம்பவம் என்ற படத்தில் நாயகனாக நடித்து அசத்தினார்.

குமரன் தங்கராஜ் , ஸ்மேகா மணிமேகலை - இன்ஸ்டாகிராம்

தற்போது இறுதிப்பக்கம் படத்தை இயக்கிய மனோ கண்ணதாசன் இயக்கத்தில் புதிய படத்தில் குமரன் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்மேகா மணிமேகலை நடிக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

குமார சம்பவம் படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கிய குமரன், இப்படத்தில் பலதரப்பட்ட ரசிகர்களைச் சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபலங்கள், ரசிகர்கள் பலர் குமரன் தங்கராஜுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

summary

Pandian Stores fame Kumaran Thangaraj starring as the hero in new movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments