FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சண்முக பாண்டியன் படத்தில் இணைந்த ஷிவானி ராஜசேகர்!

நடிகை ஷிவானி ராஜசேகர் நடிக்கும் மூன்றாவது தமிழ்ப்படம் குறித்து...

Updated On : 25 ஜூலை 2026, 1:20 pm IST
ஷிவானி ராஜசேகர் - படம்: எக்ஸ் / கேப்டன் சினி கிரேயஷன்ஸ்.
பகிர்:

இயக்குநர் திரு இயக்கும் வாணவேடிக்கை என்ற படத்தில் நடிகை ஷிவானி ராஜசேகர் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்கிறார்.

மறைந்த நடிகரரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் மகனான சண்முக பாண்டியன் தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இயக்குநர் திரு இயக்கும் இந்தப் படத்தினை கேப்டன் சினி கிரேயஷன்ஸ் சார்பாக எல்.கே. சுதீஷ் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நடிகை ஷிவானி ராஜசேகர் இணைந்துள்ளார்.

Advertisement

Advertisement

தமிழில் அன்பறிவு படத்தில் அறிமுகமான நடிகை ஷிவானி ராஜ்குமார் லெஜெண்டரி நடிகர் ராஜசேகரின் மகளாவார். நடிகை சிவாத்மிகாவின் சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஷிவானி அடுத்ததாக நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்திருந்தார்.

தற்போது, மூன்றாவது படமாக வானவேடிக்கை என்ற சண்முக பாண்டியன் படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் இவர் நடித்த வித்யா வாசுலு அகம் என்ற நகைச்சுவை கலந்த ரொமாண்டிக் திரைப்படம் கவனம் பெற்றது.

சண்முக பாண்டியன் 2015ல் நாயகனாக அறிமுகமானார். பின்னர் 2018ல் வீரன் படத்திலும் 2025ல் படைத் தலைவன், கொம்புசீவி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

summary

Shivani Rajashekar joins the cast of Shanmuga Pandian Vaanavedikai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments