அடுத்தடுத்து 5 திரைப்படங்களில் நடிக்கும் ஷண்முக பாண்டியன்!
ஷண்முக பாண்டியன் திரைப்படங்கள் குறித்து...
நடிகர் ஷண்முக பாண்டியன் அடுத்தடுத்து 5 படங்களில் ஒப்பந்தமாவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறைந்த நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகனான ஷண்முக பாண்டியன் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான படை தலைவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
தொடர்ந்து, இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் இவர் நடித்த கொம்புசீவி திரைப்படமும் பெரியளவில் கவனம் பெறவில்லை. மேலும், இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஷண்முக பாண்டியன் நடிப்பார் எனக் கூறப்பட்டது.
Advertisement
Advertisement
தற்போது, இயக்குநர் திரு இயக்கத்தில் ஷண்முக பாண்டியன் வாணவேடிக்கை என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எல். கே. சுதீஷ் தயாரிக்கிறார்.
இந்த நிலையில், ஷண்முக பாண்டியன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜையும் இன்று நடைபெற்றுள்ளது. கட்டப்பாவ காணோம் திரைப்படத்தை இயக்கிய மணி சியோன் இப்படத்தை இயக்க மனு ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.
எல். கே. சுதீஷ் தயாரிக்கும் இப்படத்துடன் மேலும் 3 திரைப்படங்களிலும் ஷண்முக பாண்டியன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற திரைப்படங்களை இயக்க முன்னணி இயக்குநர்களிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.
Reports indicate that actor Shanmuga Pandian is signing on for five consecutive films.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.