சிவாஜி பேரன் நடித்த லெனின் பாண்டியன் புதிய வெளியீட்டுத் தேதி!
லெனின் பாண்டியன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி...
சிவாஜி பேரன் நடிப்பில் உருவான லெனின் பாண்டியன் திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த நடிகர் சிவாஜியின் பேரனும் ராம்குமாரின் மகனுமான தர்ஷன் கணேசன் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் லெனின் பாண்டியன்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் கங்கை அமரனும் நடிகை ரோஜாவும் நடித்துள்ளனர். டிடி பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்க இளையராஜா இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
மணல் கொள்ளையை எதிர்க்கும் காவலரின் கதையாக இப்படம் உருவாகி இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இந்த நிலையில், லெனின் பாண்டியன் திரைப்படம் வருகிற செப். 25 ஆம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. முன்னதாக, இப்படம் ஏப்ரல் வெளியீடாகத் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
The new release date for the film directed by Lenin Pandian, starring Sivaji's grandson, has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.