3.10.1976: சிவாஜி கணேசனுக்கு பாராட்டு விழா
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
சென்னை, அக். 2 - திரைப்படத் துறையில் நடிகர் சிவாஜி கணேசனின் 25 ஆண்டுகால சேவையைப் பாராட்டும் வகையில், சென்னை நகரில் வெள்ளியன்று ஒரு விழா நடந்தது. தமிழக கவர்னர் மோகலால் சுகாதியா அவருக்கு பொன்னாடை போர்த்தினார். ஹிந்தி நடிகை நர்கிஸ், சிவாஜி கணேசனுக்கு வெள்ளி விழாப் பரிசளித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் சுமிட்டித் தலைவர் கருப்பையா மூப்பனார் ஒரு வெள்ளிக் கேடயத்தை வழங்கினார்.
இந்த விழாவிற்கு எம்.ஏ.எம். ராமசாமி தலைமை தாங்கினார். சிவாஜி கணேசனின் நடிப்புத் திறனைப் பாராட்டி முன்னாள் முதல்வர் எம். பக்தவத்சலம், கண்ணதாசன், ம. பொ. சிவஞானம், கி. வா. ஜகந்நாதன்டி, ஷெரீப் ஆர். ராமகிருஷ்ணன், நடிகை பத்மினி, ஆகியோரும் பேசினர். படத் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்ப தேவரும் சிவாஜி கணேசனுக்குப் பொன்னாடை போர்த்தினார்
பாராட்டுகளுக்கு சிவாஜி கணேசன் நன்றி தெரிவித்தார். ஆரம்பத்தில் ஏ. எல். சீனிவாசன் வரவேற்புரை ஆற்றினார்.
Advertisement
Advertisement
நவம்பர் 14 முதல் கிரிமினல் வழக்குகள் மீது தமிழில் தீர்ப்பு
மைசூர், அக். 2 - தமிழ்நாட்டில் நவம்பர் 14-ந் தேதி முதல் தமிழில் கிரிமினல் வழக்குகள் தீர்ப்பளிக்கப்படும் என்று மாநில ஆட்சிமொழி கமிஷன் தலைவர் எஸ். மகராஜன் கடந்த 30-ந் தேதி இங்கு கூறினார்.
"தென் மாநில மொழிகள் பற்றி கர்நாடக மொழி அபிவிருத்தி டைரக்டர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு பூர்த்தி விழாவில் அவர் பேசினார். கோர்ட் நடைமுறைகள், கி.பு.கோ. இ.பி.கோ மற்றும் சம்பந்தப்பட்ட தஸ்தாவேஜுகள் இதற்காக தமிழில் மொழி பெயர்க்கப்படுகின்றன என்றார்.
3.10.1976: Felicitation ceremony for Sivaji Ganesan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.