12.11.1976: 482 உயர்நிலைப் பள்ளிகளில் வகுப்பு நேரத்துக்கு பிறகு ஹிந்தி சொல்லித்தர வசதி
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
சென்னை, நவ: 11- பள்ளிக்கூடக் கல்வி டைரக்டரின் உத்தரவுப்படி, மாநிலத்தில் 482 உயர்நிலைப் பள்ளிக்கூடங்கள், வகுப்பு நேரத்துக்கு பிறகு மாணவர்களுக்கு ஹிந்தி சொல்லித்தர ஆரம்பித்துள்ளன.
பள்ளிக்கூடங்களில் ஹிந்தி தெரிந்த ஆசிரியர்களுடைய உதவியுடன் இதுவரை 37,497 மாணவர்கள் ஹிந்தி பயில்வதாக பள்ளிக்கூடக் கல்வி டைரக்டரின் பத்திரிகைக் குறிப்பு தெரிவிக்கிறது.
Advertisement
Advertisement
மாணவர்களிடையே ஹிந்தி படிப்பதற்குப் பள்ளிக்கூடங்களில் அதிக கோரிக்கை இருப்பதால், பள்ளிக்கூடங்களுக்கு ஆசிசியர்களை அனுப்பி உதவி புரியுமாறு ஹிந்தி பிரசார சபையை பள்ளிக்கூடக் கல்வி டைரக்டர் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஹிந்தி வகுப்புகளில் சேரும்படி மாவட்டங்களில் உள்ள பெற்றோர்களையும் மாணவர்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அரசியலமைப்பு திருத்த மசோதா: ராஜ்ய சபை ஏற்றது - மாநில சட்டமன்றங்களின் அங்கீகாரத்துக்குப் போகும்
புதுடில்லி, நவ: 11 - அரசியலமைப்புக்கு விரிவான திருத்தங்கள் அடங்கிய அரசியலமைப்பு 44வது திருத்த மசோதாவை பார்லிமெண்ட் இன்று அங்கீகரித்துவிட்டது. 59 ஷரத்துக்கள் கொண்ட இம்மசோதா இன்று ராஜ்ய சபையில் 191 வாக்குகள் ஆதரவாகப் பெற்று நிறைவேறியது. எதிர்த்து ஒரு வாக்குகூட பதிவாகவில்லை. இம்மசோதா ஏற்கனவே லோக சபையில் நிறைவேறிவிட்டது.
அரசியலமைப்பில் உள்ள ஷரத்துக்களின்படி இம் மசோதா போதிய மெஜாரிட்டி பெற்று நிறைவேறியதாக சபைத் தலைவர் பி. டி. ஜட்டி அறிவித்தபோது அங்கத்தினர்கள் கைத்தட்டி வரவேற்றனர்
ராஜ்ய சபையில் இம்மசோதா மீது மொத்தம் 6 நாட்கள் விவாதம் நடந்தது. நூறுக்குமேற்பட்ட அங்கத்தினர்கள் விவாதத்தில் கலந்து கொண்டனர்.
மசோதாவின் இறுதி வாசிப்பின்மீது நடந்த விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய சட்ட அமைச்சர் கோகலே, தேசத்தின் முன்பு உள்ள பணி மகத்தானது என்று கூறினார். "இந்த முக்கிய நடவடிக்கைக்குப் பிறகு அரசியலமைப்பு எந்த லட்சியத்துக்காக மாற்றப்பட்டதோ, அந்த லட்சியத்துக்காக நாம் வேலை செய்ய ஆரம்பிக்க வேண்டும் என்று கூறிஞர். இந்த லட்சியத்தை வெற்றிகரமாக அடைய "விழுமின் எழுமின், லட்சியத்தை அடையும் வரை ஓய்த்திராதீர்" என்ற விவேகானந்தரின் வார்த்தைகளை நாடு நினைவில் கொள்ளவேண்டும் என்று கோகலே கூறினார்.
மாநில சட்டசபைகளுக்கு அனுப்பப்படும்
பார்லிமெண்ட் இம் மசோதாவை அங்கீகரித்துவிட்டதைத் தொடர்ந்து இம்மசோதா இனி மாநில சட்ட மன்றங்களின் அங்கீகாரத்துக்காகப் போகும்.
அரசியலமைப்பு ஷரத்துக்களின் படி, இம்மசோதாவை மொத்த மாநில சட்ட சபைகளில் பாதி, மசோதாவை அங்கீகரித்து தீர்மானங்ளை நிறைவேற்ற வேண்டும். மாநிலங்களில் பாதி, மசோதாவை அங்கீகரித்த பிறகு மசோதா ராஷ்டிரபதியின் சம்மதத்துக்காக சமர்ப்பிக்கப்படும். ...