FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

8.11.1976: பல்கலைக்கழகங்களுக்கு தனியார் கல்லூரிகளை பார்வையிடும் அதிகாரம் - த.நா. அரசு அறிவிப்பு

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

8.11.1976 - Dinamani
பகிர்:

திருச்சி. நவ. 7 - மதுரை, சென்னை பல்கலைக் கழக சரகங்களில் உள்ள தனியார் கல்லூரிகள் அவற்றின் கட்டிடங்கள், நூலகங்கள், ஆராய்ச்சி கூடங்கள், உபகரணங்கள் ஆகியவற்றை பார்வையிட அந்தந்த பல்கலைக் கழகங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இப்பணியை மாநில கல்லூரி கல்வி டைரக்டர் அலுவலகம் கவனித்து வந்தது.

1976ம் வருடம் தமிழ் நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கு தங்கள் பகுதிகளிலுள்ள தனியார் கல்லூரிகளை பார்வையிட அல்லது விசாரணை நடத்த அதிகாரம் அளிக்கப்படுகிறது.

சமையல் எண்ணெய்க்கான தேசிய திட்டம் அமலாகும்

பெங்களூர், நவ. 7 - சமையல் எண்ணெய்கள் விஷயத்தில் அரசாங்கம் தேசியத் திட்டம் ஒன்றை இறுதியாக்கியுள்ளது என்றும், அது அமல்படுத்தப்படும் கட்டத்தில் உள்ளது என்றும் மத்திய சிவில் சப்ளை துணை மந்திரி ஏ. சி.ஜார்ஜ் இன்று அறிவித்தார்.

Advertisement

Advertisement

பெங்களூரில் 14-வது அகில இந்திய எண்ணெய் வித்து, எண்ணெய் தொழில் வர்த்தக மாநாட்டில் இன்று அவர் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

சமையல் எண்ணெய் உற்பத்தி, போதுமான அளவுக்கு உயரவில்லை என்பதைப் புள்ளி விவரங்கள் காட்டுவதால் இவற்றின் உற்பத்தியை மேலும் பெருக்குவது இத்தேசியத் திட்டத்தின் மைய அம்சமாக இருக்கும். உற்பத்தி தேவை நடுவே உள்ள இடைவெளியைப் பூர்த்தி செய்ய விரைவுப் பலன் திட்டம் திட்டம் தேவை என்றும் அவர் சொன்னார்.

மேலும் நல்ல முறையிலான ஒதுக்கீடு, சீரான சமமான வினியோகம், இடைவெளிகளுடன் சமையல் எண்ணெய் இறக்குமதி, நீண்ட கால அளவில் கட்டுப்பாட்டுடன் கூடிய ஏற்றுமதித் திட்டம் ஆகியன இத்திட்டத்தின் மற்ற அம்சங்களாகும் என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டிலும் நிலக்கடலை விளைச்சல் அமோகமாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ...

summary

8.11.1976: Universities granted authority to inspect private colleges – Tamil Nadu Government announcement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.