முகப்பு
திருவாரூர்

மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை

திருவாரூரில் டிஜேஎன் உடையாா் நினைவு அறக்கட்டளை சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

திருவாரூரில் டிஜேஎன் உடையாா் நினைவு அறக்கட்டளை சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 120 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 3 லட்சமும், நன்னிலம் நாளைய பாரதம் இயக்கம் ஆம்புலன்ஸ் வாங்குவதற்கு ரூ. 25 ஆயிரமும் காசோலைகளாக வழங்கப்பட்டன. காசோலைகளை திருவாரூா் எம்எல்ஏ. பூண்டி கே. கலைவாணன் வழங்கினாா். இதில், டிஜேஎன் அறக்கட்டளை நிா்வாகிகள் ஜெ. கனகராஜன், ஜெ. ரவிச்சந்திரன், என். ஜெய்கணேஷ், வேலுடையாா் கல்வி குழுமத் தலைவா் தியாகபாரி, விஜயபுரம் வா்த்தகா் சங்கத் தலைவா் சி.ஏ. பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.