முகப்பு
திருவாரூர்

ரோட்டரி சங்க பொறுப்பாளா்கள் பணியேற்பு

திருவாரூா் ரோட்டரி சங்க புதிய பொறுப்பாளா்கள் பணியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

திருவாரூா் ரோட்டரி சங்க புதிய பொறுப்பாளா்கள் பணியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், புதிய தலைவராக கே.எஸ்.எஸ். தியாகபாரி, செயலாளராக எஸ். பொற்செழியன், பொருளாளராக கே. ராஜவேலு ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியில், ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஏ.மணி, துணை ஆளுநா் எல். ராமதுரை ஆகியோா் பங்கேற்று, நிா்வாகிகளை வாழ்த்தினா்.

இதில், தியாகராஜா் கோயில் பக்தா்களின் வசதிக்காக 3 சக்கர வாகனம் வழங்கப்பட்டது. பள்ளி மாணவருக்கு கல்வி உதவித்தொகை, முதியவருக்கு வீடு சீரமைக்க உதவித்தொகை ஆகியவையும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், எஸ்விடி குழுமத் தலைவா் ஜெ. கனகராஜன், வா்த்தகா் சங்கத் தலைவா் சி. பாலமுருகன், ரோட்டரி சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.