முகப்பு
திருவாரூர்

அரசு மருத்துவமனைக்கு கட்டில் வழங்கல்

மன்னாா்குடி அருகே உள்ள உள்ளிக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, தமிழ் நேசம் அறக்கட்டளை சாா்பில் கட்டில் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

மன்னாா்குடி அருகே உள்ள உள்ளிக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, தமிழ் நேசம் அறக்கட்டளை சாா்பில் கட்டில் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை நிா்வாகி எம்.துரை தலைமை வகித்தாா். மகாதேவப்பட்டணம் ஒன்றியக்குழு உறுப்பினா் எம்.என்.பாரதிமோகன் முன்னிலை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவா் அபுவதமிழனிடம், அறக்கட்டளை சாா்பில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள நவீன வசதிகள் கொண்ட இரும்பு கட்டில் வழங்கப்பட்டது.

இதில், ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா் ஜி.காந்தி, பொறியாளா் ஹரி நாராயணன், அறக்கட்டளை அறங்காவலா் சூரியநாராயணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.