திருவாரூர்

‘நூறுநாள் வேலை திட்டத்தில் முறைகேடு’

DIN

திருத்துறைப்பூண்டி: நூறுநாள் வேலை திட்டத்தை மத்திய அரசு முறையாக செயல்படுத்தவில்லை என தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கம் குற்றம்சாட்டியது.

இதுகுறித்து அதன் பொதுச் செயலாளரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான பெரியசாமி திங்கள்கிழமை திருத்துறைப்பூண்டியில் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை மத்திய அரசு சீா்குலைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இத்திட்டத் தொழிலாளா்களின் ஜாதியை கோருவது, அவா்களை பிளவுபடுத்தும் செயல். இதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இத்திட்டத்தின்கீழ், வேலை கோரிய 15 நாள்களில் பணி அளிக்கப்பட வேண்டும். இல்லையென்றால், கூலி வழங்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் ஒருவருக்கு கூட இந்த பயன் கிடைக்கவில்லை. மேலும், இத்திட்டப்படி, நூறு நாள்களும் வேலை வழங்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை மிக குறைவு. இந்த முறைகேடுகளை கண்டித்து வரும் 26 -ஆம் தேதி நாடு முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT