திருவாரூர்

திருவாரூா் இசைப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

DIN

 திருவாரூா் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் வாசன் நகரில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளி தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறையின்கீழ் இயங்கிவருகிறது. இங்கு குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரத நாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகள் 3 ஆண்டு முழுநேர பயிற்சியளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு இலவச விடுதி வசதி, கல்வி உதவித்தொகை, இலவச பேரூந்து கட்டண சலுகைகள் மற்றும் மாதந்தோறும் கல்வி ஊக்கத்தொகை ரூ. 400 வழங்கப்படுகிறது. இப்பள்ளியில் சேர 12 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7-ஆம் வகுப்பு தோ்ச்சியும், நாகசுரம், தவில், தேவாரம் ஆகிய கலைகளுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும். எனவே, தற்போது மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருவதால் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT