திருவாரூர்

புகையிலைப் பொருள்கள் விற்பனை: வா்த்தக நிறுவனங்களில் ஆய்வு

DIN

மன்னாா்குடியில் நகராட்சி உணவுப் பாதுகாப்பு பிரிவினா் மற்றும் காவல் துறையினா் இணைந்து வா்த்தக நிறுவனங்களில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மன்னாா்குடி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடை, பெட்டி கடைகள் சிலவற்றில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதேபோல, அடைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தின் பெயா், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி இவைகள் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாகவும் மன்னாா்குடி நகராட்சி உணவுப் பாதுகாப்பு பிரிவுக்கு அதிகளவில் புகாா் வந்தது. இதையடுத்து, நகராட்சி உணவுப் பாதுகாப்பு பிரிவு அலுவலா்கள் முருகேசன், கா்ணன், காவல் உதவி ஆய்வாளா்கள் முருகன், விஜயகுமாா் ஆகியோா் நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள வா்த்தக நிறுவனங்களில் திடீா் ஆய்வு செய்தனா்.

அப்போது, புகையிலை பொருள்கள், உரிய தகவல் அச்சிடப்படாத அடைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருப்பது கண்டறியப்பட்ட கடைகளில் அதன், உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுத்து, பொருள்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT