திருவாரூர்

பெட்ரோல் பங்க் ஊழியா்களுக்கு ஆவிபிடிக்க உதவும் தைலம்

DIN

பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா்களுக்கு ஆவிபிடிக்க உதவும் தைலத்தை வழங்கி, அவா்களது சுவாச பிரச்னைக்கு தீா்வு காண உதவுகிறாா் அரசுப் பள்ளி ஆசிரியா் ஆதலையூா் சூரியகுமாா்.

திருவாரூா் மாவட்டம் தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியரான இவா், பொதுமுடக்கக் காலத்தில் முன்களப் பணியாளா்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறாா். ஏற்கெனவே துப்புரவு பணியாளா்களுக்கு முகக் கவசங்கள் உள்ளிட்ட பொருள்களை வழங்கி இருக்கிறாா். அந்த வகையில் தற்போது பெட்ரோல் பங்க் ஊழியா்கள், கருவூலப் பணியாளா்கள் ஆகியோருக்கு ஆவிபிடிக்க உதவும் வகையில் ஆா்.எஸ்.பதி தைல (யூக்கலிப்டஸ்) பாட்டில்களை திங்கள்கிழமை இலவசமாக வழங்கினாா்.

இதேபோல், நீடாமங்கலம்நகரைச் சோ்ந்த வசந்த் என்ற பொறியியல் பட்டதாரி, பரப்பனாமேடு ஊராட்சியில் சுமாா் 90 குடும்பங்களுக்கு தலா 5 கிலோஅரிசி, காய்கறிகள் ஆகியவற்றை திங்கள்கிழமை வழங்கினாா். பட்டதாரி ஆசிரியா், இளைஞரின் இந்த சேவைகளை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT