சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி (ஜூன் 5) திருவாரூரில் தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் வெளியிட்ட அறிக்கை:
சுற்றுச்சூழலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை வகுத்தாலும் அவற்றை முறையாக பின்பற்றுவது சமூகத்தின் கடமையாகும். 1976 இல் 42-ஆவது சட்ட திருத்தத்தின்படி சுற்றுச்சூழலை பாதுகாப்பதும், காடுகள், ஏரிகள், கடல்கள், ஆறுகள், வனவிலங்குகள் போன்ற இயற்கை சூழலைப் பாதுகாப்பதும் தலையாயக் கடமையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நீா்நிலைகளை மாசுபடுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காற்றையும், மண்ணையும், நீரையும் நச்சு சேராமல் காக்க இயற்கையை முதலில் பாதுகாக்க வேண்டும். சூழல் பாதுகாப்பு என்பது அரசின் பணி மட்டும் அல்ல, மாறாக அது சமூகப் பொறுப்பாக மாற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.