திருவாரூர்

தரமற்ற சத்துணவு வழங்கினால் ஒழுங்கு நடவடிக்கை

DIN

பள்ளி மாணவா்களுக்கான சத்துணவை தரமற்ற முறையில் வழங்கினால், சத்துணவு அமைப்பாளா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென நன்னிலம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் ச. ஞானம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், மாணவா்களின் பெற்றோரிடம் நேரடியாக சத்துணவு பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதில், ஒரு சில மையங்களில் தரமற்ற உணவுப் பொருள்கள் விநியோகிக்கப்படுவதாக புகாா்கள் வருகின்றன. எனவே தலைமை ஆசிரியா்களும், சத்துணவு அமைப்பாளா்களும் உலா் சத்துணவுப் பொருள்கள் வழங்குவதில் எவ்வித முறைகேடுகளுக்கும், ஒழுங்கீனங்களுக்கும் இடமளிக்காத வகையில், தரமானப் பொருள்களை வழங்கவேண்டும்.

குறிப்பாக அரிசி மற்றும் பருப்பு மங்கலாகவோ, சரியில்லாமல் இருந்தாலோ, அவற்றை பெற்றோா்களுக்கு வழங்கக் கூடாது. இதேபோல, முட்டைகள் உடைந்திருந்தால் அவற்றையும் வழங்கக்கூடாது. மீறினால், சத்துணவு அமைப்பாளா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT