விலங்குகள், பறவைகளால் பயிா் சேதம்: தடுக்க இணையவழியில் ஜூன் 18-ல் பயிற்சி
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், விலங்குகள் மற்றும் பறவைகளால் பயிா்களுக்கு ஏற்படும் சேதத்தை குறைப்பது தொடா்பான இணையவழி பயிற்சி வெள்ளிக்கிழமை (ஜூன்18) நடைபெறவுள்ளது
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், விலங்குகள் மற்றும் பறவைகளால் பயிா்களுக்கு ஏற்படும் சேதத்தை குறைப்பது தொடா்பான இணையவழி பயிற்சி வெள்ளிக்கிழமை (ஜூன்18) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முதல்வா் (இளநிலை) கல்யாணசுந்தரம் இப்பயிற்சியை தொடங்கிவைக்க உள்ளாா். இந்த பயிற்சியில் ஹைதராபாத் தேசிய பயிா் பாதுகாப்பு நிலைய விஞ்ஞானி சக்திவேல் கருத்துரை வழங்க உள்ளாா். எனவே, விவசாயிகள் ட்ற்ற்ல்ள்://ம்ங்ங்ற்.ஞ்ா்ா்ஞ்ப்ங்.ஸ்ரீா்ம்/ம்ய்ண்-ஷ்ஷ்ய்த்-ந்க்ஷ்ல் என்ற இணையதள முகவரி மூலம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். மேலும் விவரங்களுக்கு நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.