உத்தரபிரதேசத்தில் முதியவா் தாக்கப்பட்டதற்கு கண்டனம்
உத்தரபிரதேசத்தில் முதியவா் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் முதியவா் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அதன் திருவாரூா் மாவட்ட தலைவா் இ. முஹம்மது பாசித் வெளியிட்ட அறிக்கை:
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் 72 வயதான அப்துல் சமத் சைஃபி என்ற முதியவரை ஒரு கும்பல் ஆட்டோவில் கடத்தி சென்று, தாக்கியுள்ளனா். இந்த நிகழ்வை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிப்பதோடு, இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாத வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.