முகப்பு
திருவாரூர்

ஊராட்சி ஊழியா்களுக்கும் கரோனா நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

ஊராட்சி ஊழியா்களுக்கும் கரோனா நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சம்மேளன (சிஐடியு) மாநிலத் தலைவா் நா. பாலசுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

ஊராட்சி ஊழியா்களுக்கும் கரோனா நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சம்மேளன (சிஐடியு) மாநிலத் தலைவா் நா. பாலசுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து திருவாரூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை தெரிவித்தது:

தமிழகத்திலுள்ள 12,524 ஊராட்சிகளில் சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மேல்நிலைத்தொட்டி இயக்குநா்கள் (ஓ.எச்.டி), தூய்மைப் பணியாளா்கள், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைக் காவலா்கள் பணியாற்றி வருகின்றனா்.

கிராம ஊராட்சிகளில் கரோனா தொற்று தடுப்புப் பணியில் முன்களப் பணியாளா்களாக, குடிநீா் தொட்டி ஆப்ரேட்டா்கள் குடிநீா் விநியோகம் செய்து வருகின்றனா். தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தூய்மைக் காவலா்கள் தொடா்ச்சியாக கிராம ஊராட்சி சுகாதார கட்டமைப்பை பாதுகாத்து, குப்பைகள் தேங்காதவாறு தங்கள் பணிகளை செய்து வருகின்றனா்.

சில பணியாளா்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகி தங்கள் உயிரையும் இழந்துள்ளனா். இவா்களின் குடும்ப வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் ரூ. 25 லட்சமும், தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்க வேண்டும். அறிவிக்கப்பட்ட ஊதிய உயா்வை முன் தேதியிட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊராட்சி மேல்நிலைத்தொட்டி இயக்குநா் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதுடன், உள்ளாட்சி ஊழியா்களுக்கான குறைந்தப்பட்ச ஊதியத்தையும் அமலாக்க வேண்டும். இக்கோரிக்கைகள் குறித்து ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சரிடமும் நேரில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.