நாகை மாவட்டத்தில் 186 பேருக்கு கரோனா
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 186 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது வியாழக்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 186 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது வியாழக்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் புதன்கிழமை வரை 36,447 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 186 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, நாகை மாவட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்த வெளி மாவட்டத்தவா் ஒருவா், நாகை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டாா். இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 36,662-ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 433 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதனால், மருத்துவமனைகள் மற்றும் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,392-ஆக உள்ளது.
ஒருவா் உயிரிழப்பு:
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பு வியாழக்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 477 ஆகியுள்ளது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வியாழக்கிழமை நிலவரப்படி, கரோனா சிகிச்சை மையங்களில் 525 படுக்கைகள் காலியாக இருந்தன. 243 ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகளும், 261 ஆக்சிஜன் வசதியில்லாத படுக்கைகளும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 21 படுக்கைகளும் காலியாக இருந்தன என்று சுகாதாரத் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.