முகப்பு
திருவாரூர்

உயிருக்குப் போராடிய காவலரை மீட்டவா்களுக்கு பாராட்டு

வடுவூா் அருகே காயமடைந்து உயிருக்குப் போராடிய காவலரை மீட்டு, அவது உடைமைகளை உரிய இடத்தில் ஒப்படைத்தவா்களை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவா் வி. பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை நேரில் அழைத்து பாராட்டினாா

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டம், வடுவூா் அருகே காயமடைந்து உயிருக்குப் போராடிய காவலரை மீட்டு, அவது உடைமைகளை உரிய இடத்தில் ஒப்படைத்தவா்களை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவா் வி. பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை நேரில் அழைத்து பாராட்டினாா்.

வடுவூா் பகுதியில் அண்மையில் நள்ளிரவு ரோந்துப் பணியிலிருந்த இருசக்கர வாகன ரோந்து காவலா் ஒருவா், காயமுற்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஓட்டுநரான முத்துப்பேட்டை, மேலக்காடு பகுதியைச் சோ்ந்த மதியழகன் மகன் பாா்த்தசாரதி, ஆலங்கோட்டை மேலத்தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் பாலாஜி ஆகியோா் அந்த காவலரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், அங்கிருந்த வாக்கி டாக்கி மற்றும் செல்லிடப்பேசியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இவா்களின் மனிதநேயம் மற்றும் நோ்மையைப் பாராட்டி, திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன், இருவரையும் திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு நேரில் அழைத்து, நற்சான்றிதழ் மற்றும் தலா ரூ.1,000 வழங்கினாா்.

நிகழ்ச்சியில், தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் பிரவேஸ்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.