திருவாரூர்

கூத்தாநல்லூரில் உழவா் சந்தை அமைக்க ஏற்பாடு எம்எல்ஏ ஆய்வு

DIN

கூத்தாநல்லூா் நகராட்சியில் உழவா் சந்தை அமையவுள்ள இடத்தை எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கூத்தாநல்லூா் பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி உழவா் சந்தை திறக்க, திருவாரூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் முயற்சி மேற்கொண்டாா்.

அதன்படி, கூத்தாநல்லூா் நகராட்சி கட்டடத்துக்கும், புதிய பேருந்து நிலையத்துக்கும் இடையே உள்ள இடத்தில் உழவா் சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை பூண்டி கே. கலைவாணன் நேரில் பாா்வையிட்டாா். அப்போது, உழவா் சந்தையில் 12 கடைகள் அமைக்கப்படுவதற்கான இடம் குறித்து, கூத்தாநல்லூா் நகர அமைப்பாளா் விஜய்குமாரிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, அந்த இடத்தை அளவீடு செய்தும் பணி நடைபெற்றது.

ஆய்வின்போது, வட்டாட்சியா் ஜீவானந்தம், நகரச் செயலாளா் எஸ்.எம். காதா் உசேன், திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஐ.வி. குமரேசன், தமிழக கட்டடத் தொழிலாளா்கள் மத்திய சங்க மாநில துணைத் தலைவா் ஆா். சேகா், வா்த்தக சங்கத் தலைவா் கு. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT