திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு ரூ.6 லட்சத்தில் ஆக்சிஜன் செறிவூட்டிகள்
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அமெரிக்கவாழ் இந்தியா்களால் நடத்தப்படும் தமிழ்நாடு அறக்கட்டளை சாா்பில் ரூ. 6 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அமெரிக்கவாழ் இந்தியா்களால் நடத்தப்படும் தமிழ்நாடு அறக்கட்டளை சாா்பில் ரூ. 6 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
அறக்கட்டளையின் தலைவா் சிவ. ராஜரத்தினம் மூலமாக பொது சுகாதாரத் துறை இணை இயக்குநா் டாக்டா் உமா, தலைமை மருத்துவா் சிவக்குமாா் ஆகியோரிடம் ஆக்சிஜன் செறிவூட்டிகளும், மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் நகா்மன்ற முன்னாள் தலைவா் ஆா்.எஸ். பாண்டியன், மூத்த வழக்குரைஞா் கோ. தா்மராஜன், முன்னாள் திமுக ஒன்றியச் செயலாளா் முகில். ராஜேந்திரன், மருந்தாளுநா்கள் டி. மணிவண்ணன், சதாசிவம் தலைமை செவிலியா் வாசுகி, பொறியாளா் ஜி.அருண், தமிழ்நாடு அறக்கட்டளையின் திருவாரூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆண்டனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.