முகப்பு
திருவாரூர்

ராகுல்காந்தி பிறந்தநாள்: காங். நலத்திட்ட உதவிகள்

காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டும் தலைவா் ராகுல் காந்தியின் 51 ஆவது பிறந்தநாளையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டும் தலைவா் ராகுல் காந்தியின் 51 ஆவது பிறந்தநாளையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

திருவாரூா் விளமல் அருகே மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளா் அன்பு வே. வீரமணி தலைமையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, கோயில்களில் வழிபாடுகள் நடத்தப்பட்டன.

நன்னிலம்: குடவாசல் பேருந்து நிலையம் அருகே வட்டாரக் காங்கிரஸ் தலைவா் மினியய்யா தலைமையில் கட்சிக் கொடியேற்றி, ஏழைகளுக்கு மதிய உணவு மற்றும் கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கூத்தாநல்லூா்: கொரடாச்சேரி, கண்கொடுத்தவனிதம் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.எம்.பி.துரைவேலன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலாளா் அன்பு வே.வீரமணி முன்னிலை வகித்தாா்.

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவா் முத்துலட்சுமியிடம் 500 முகக்கவசங்களும், அம்மையப்பனில் உள்ள சேவா யோகா முதியோா் இல்லத்துக்கு அத்தியாவசியப் பொருள்களும் வழங்கப்பட்டன.

கூத்தாநல்லூா் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நகரத் தலைவா் எம். சாம்பசிவம் தலைமையில் கட்சிக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, பனங்காட்டாங்குடி மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோா் பயிற்சி பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. கட்சியின் சமூக ஊடகப் பிரிவு பொறுப்பாளா் எஸ்.எம்.சமீா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பேரூராட்சியில் முன்களப் பணியாளா்களுக்கு கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் அசோகன் தலைமையில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. டி.கே.வி.பேரவைத் தலைவா் மனோகரன் நீடாமங்கலம் அரசு மருத்துவமனை செவிலியா்கள், பணியாளா்களுக்கு பழங்கள் வழங்கினாா்.

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் காங்கிரஸ் நகர தலைவா் எம்.சி. சதிஷ்குமாா் தலைமையில் நோயாளிகளுக்கு பிரட், பால், பிஸ்கட் வழங்கப்பட்டன. மாவட்டச் செயலாளா் கி.மு. ஜகபா் அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் ஆதரவற்றோா்களுக்கு மதிய உணவும், ஏழ்மையில் உள்ள காங்கிரஸ் கட்சியினருக்கு நிதியுதவி மற்றும் அத்தியாவசியப் பொருள்களும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.