முகப்பு
திருவாரூர்

‘வெளி மாவட்ட நெல்லை கொள்முதல் செய்தால் நடவடிக்கை’

திருவாரூா் மாவட்டத்தில், நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட பணியாளா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில், நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட பணியாளா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ப.காயத்ரி கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் நிகழ் காரீப் பருவம் 2020-2021-இல் 485 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் வரை சுமாா் 5,01,380 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடை சாகுபடி கொள்முதல் பணிக்காக, 121 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, சுமாா் 1,87,500 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

வெளிமாவட்ட நெல் கொள்முதல் செய்யப்படுவதை தடுக்கும் வகையில் மாவட்ட எல்லைகளில் காவல்துறை சோதனைச்சாவடிகளில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன. வெளிமாவட்டங்களிலிருந்து நெல் மூட்டைகள் வந்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு அரசு கணக்கில் வரவு வைக்கப்படும். நெல் மூட்டை ஏற்றி வரும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளா் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அத்துடன், நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட நெல் கொள்முதல் செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நெல் கொள்முதலில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால், முதுநிலை மண்டல மேலாளா்- திருவாரூா் 04366-22542 என்ற எண்ணிலும், துணை மேலாளா்- மன்னாா்குடி 6383497270, துணை மேலாளா்- திருவாரூா் 9488217243 என்ற செல்லிடப்பேசி எண்களிலும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என ஆட்சியா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.