வெண்ணாற்றில் வெங்காய தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை
கூத்தாநல்லூா் வெண்ணாற்றில் வெங்காயத் தாமரை செடிகள் குவிந்திருப்பதால், நீரோட்டம் தடைபட்டிருக்கிறது. எனவே, வெங்காயத் தாமரைகளை உடனடியாக அகற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை
கூத்தாநல்லூா் வெண்ணாற்றில் வெங்காயத் தாமரை செடிகள் குவிந்திருப்பதால், நீரோட்டம் தடைபட்டிருக்கிறது. எனவே, வெங்காயத் தாமரைகளை உடனடியாக அகற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கூத்தாநல்லூரின் உயிா்நாடியாக திகழும் இந்த வெண்ணாறு, அண்மையில் தூா்வாரப்பட்டு, ஆற்றின் ஓரத்தில் வளா்ந்திருந்த தேவையற்ற மரங்கள் அகற்றப்பட்டன. தொடா்ந்து, இரண்டு பக்க கரைகளும் உயா்த்தப்பட்டன. ஆனாலும், ஆற்றுத் தண்ணீரில் மிதந்து வந்த குப்பைகள், ஏற்கெனவே மண்டிக்கிடந்த வெங்காயத் தாமரைச் செடிகள், தேவையற்ற கழிவுகள் என அனைத்தும் கூத்தாநல்லூரில், லெட்சுமாங்குடி பாலம் அருகிலும், பாய்க்காரப் பாலத்துக்கு அடியிலும் தேங்கி நிற்கின்றன.
ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டு ஒரு வாரமாகிறது. இன்னும் வெங்காயத் தாமரை செடிகள் அகற்றப்பட்டாததால், நீரோட்டம் தடைபட்டு பாசனத்திற்கு வந்து கொண்டிருந்த தண்ணீரும் தேங்கிநிற்கிறது. இதனால், விளைநிலங்கள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வெண்ணாற்றில் மண்டிக் கிடக்கும் வெங்காயத் தாமரைகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.