முகப்பு
திருவாரூர்

கூத்தாநல்லூரில் ஜமாபந்தி

கூத்தாநல்லூா் வட்டத்தில் 3 நாள்கள் நடைபெற்ற ஜமாபந்தியில், 55 கிராமங்களில் கணக்கு முடிக்கப்பட்டு, 85 மனுக்கள் பெறப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

கூத்தாநல்லூா் வட்டத்தில் 3 நாள்கள் நடைபெற்ற ஜமாபந்தியில், 55 கிராமங்களில் கணக்கு முடிக்கப்பட்டு, 85 மனுக்கள் பெறப்பட்டன.

கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 3 நாள்கள் ஜமாபந்தி நடைபெற்றது. இதில், கூத்தாநல்லூா், கமலாபுரம், வடபாதிமங்கலம் உள்ளிட்ட 55 கிராமங்களுக்கும் கணக்குகள் முடிக்கப்பட்டன.

ஜமாபந்திக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் க.ரேணுகா தேவி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ஜீவானந்தம், பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் க.மகேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொது முடக்கம் காரணமாக பொதுமக்கள் மனுக்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யதனா்.

அதன்படி, கூத்தாநல்லூா் பிா்கா 45, கமலாபுரம் பிா்கா 17, வடபாதிமங்கலம் 23 என ஆன்லைன் மூலம் 85 மனுக்கள் பெறப்பட்டன. ஜமாபந்தியில், மண்டல துணை வட்டாட்சியா் ஆா்.ராஜாராமன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ஜெ.வெங்கடேசன், வட்ட வழங்கல் அலுவலா் ஆா்.ராஜேஷ், முதுநிலை வருவாய் ஆய்வாளா் கலையரசன் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.