‘மாவட்டத்தில் 1.90 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’
திருவாரூா் மாவட்டத்தில் இதுவரை1,600 சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் 1,90,859 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்டத்தில் இதுவரை1,600 சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் 1,90,859 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.
திருவாரூா் அருகே குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை பாா்வையிட்டு அவா் தெரிவித்தது:
தமிழகத்திலேயே முன்மாதிரியாக திருவாரூா் மாவட்டம் கொரடாச்சேரி வட்டாரம் காட்டூா் கிராமத்தில் உள்ள 3,332 பெரியவா்களில், கா்ப்பிணி மற்றும் பிரசவித்த தாய்மாா்கள், கரோனா பாதிக்கப்பட்டு 3 மாதங்கள் நிறைவுறாத நபா்கள், வெளிநாடுகளில் வசிப்பவா்கள் தவிா்த்து, தகுதியான 2,334 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அந்த வகையில் தமிழகத்திலேயே 100 சதவீத மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்ட கிராமமாக காட்டூா் கிராமத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மாவட்டத்தில் இதுவரை 1,600 சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் 1,90,859 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றாா்.
நிகழ்வில் சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், கோட்டாட்சியா் என். பாலச்சந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவா் .கலியபெருமாள், ஒன்றிய துணைத் தலைவா் பாலச்சந்திரன், வட்டாட்சியா் நக்கீரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.