திருவாரூர்

நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயில் கிழக்கு கோபுரவாசல் கதவு திறப்பு

DIN

நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயில் கிழக்கு கோபுரவாசல் கதவு வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

இக்கோயில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னா் பிரதாபசிம்மரால் கி.பி. 1761-இல் கட்டப்பட்டது. கோயில் அருகில் உள்ள வெண்ணாற்றில் நீராடிவிசாலாட்சி சமேத காசிவிசுவநாதரை வழிபட்டால் காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சிறப்பு பெற்ற இக்கோயிலின் கிழக்கு கோபுரவாசல் கதவு திறந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. பழுதடைந்த இக்கதவை பிரதோஷ கமிட்டியினரால் சீரமைக்கப்பட்டு கோ பூஜை நடத்தி, சிவகணம் வாத்தியங்கள் முழங்க கதவு திறக்கப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று பக்தி கோஷம் எழுப்பினா். கிழக்கு கோபுரவாசல் நாள்தோறும் இனி திறக்கப்பட்டிருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT